×

காமராஜர் சிலைக்கு மரியாதை

விருதுநகர், ஆக. 24: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு, பாஜ தேசிய தமிழக பார்வையாளர் சுதாகர்ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் பாஜ விவகாரங்களை பார்வையிட்டு, மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என ஆய்வு செய்கிறேன். கடந்த 75 வருடங்களில் மோடி அரசு மட்டுமே உலக அளவில் பாராட்டு பெற்றுள்ளது. விருதுநகர் விவசாயத்தை பின்புலமாக கொண்ட மாவட்டமாக உள்ளது.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நெடுஞ்சாலை வசதி, ரயில்வே, மெட்ரோ, பொருளாதார வளர்ச்சி, விவசாயிகள் நலன், பின்தங்கிய இனத்தவர்களை முன்னேற்ற திட்டங்கள், சுகாதார திட்டங்கள், கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.7.50 லட்சம் கோடி நிதி வழங்கி உள்ளது. ஜிஎஸ்டி பொதுவான வரியை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். தென்மாவட்ட பொறுப்பாளர் பாலகணபதி, கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kamaraja Idol ,
× RELATED காமராஜர் சிலைக்கு மரியாதை